Sunday 1 March 2015

ஒரு நல்ல குறுகதை அதுவும், கற்பனை கலந்த கதை அதிலும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை  நையாண்டியாக சொல்லக் கூடிய கதை என்றால் படிக்க எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் அப்படிப்பட்ட கதை இந்த வரம் ஆனந்த விகடனில் பிரசுரம் ஆனது. பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளனை தோற்க்கடித்துவிட்டோம் என்போர்க்கு பதில் தரும் விதமாகவே இது அமைத்தது என்பதே இதன் சிறப்பு. காலத்தின் ஓட்டத்தில் படிக்க தவறியவர்களுக்கு .

             எழுத்தாளர் கதிர்காமன் ஆபரேஷன் மேஜை மீது கிடத்தப்பட்டிருதார். அது ஒரு சாதிச் சங்கம் நடத்தும் ஆஸ்பத்திரி சாதிக்கு எதிராகப் போராட்டம் செய்பவர்களைக் கடத்தி மூலையின் நினைவுங்கிடங்கான ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் பகுதியை அகற்றுவதே அவர்கள் வேலை. இப்போது முதன் முதலாக ஒரு எழுத்தாளன்.காரணம் அவன் எழுதிய ஒரு நாவல்.

“ஆபரேஷன் சக்சஸ்” என்றார் தலைமை மருத்துவர் சுவாமிநாதன்
“இல்லை” என்றன் இளம் மருத்துவர், இளங்கோ.
சுவாமிநாதன் நெற்றியை தன் கிளவுஸ் கையில் இருக்கும் கத்திரியால் சொறிந்து “என்ன சொல்ற” என்றார்.
இளங்கோ மானிட்டரை ஆன் செய்து சுவாமிநாதனுக்கு எதிராக திருப்பினான்.
கதிர்காமனின் மூலையின் ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் பகுதியின் லைவ் ஸ்கேன் இது.அதில் சாதிக்கு எதிரான அவரின் மின்காந்தப் பதிவுகளை உற்றுப்பாருங்க.அவை ஏற்ககெனவே காப்பி பண்ணப்பட்டிருக்கு நாம இப்போ அழிச்சது ஒரு ஜெராக்ஸ் பேப்பரைக் கிழிச்சுப் போட்டத்துக்குத்தான் சமம்.

“என்ன சொல்ற” ....புரியலை என்றார் சுவாமிநாதன்.
                             சார், நாம இதுவரை பண்ணின மாதிரி இல்ல இது. இவர் ஒரு எழுத்தாளர் இவரோட நினைவுக்கிடங்கான மூளையின் ஃப்ரன்டல் கார்ட்டெக்ஸ் என்பது, எல்லா மனிதர்களுக்கு இருபது போல் ஒண்ணே ஒண்ணு கிடையாது. இவரோட நாவல் ரெண்டாயிரம் காப்பி வித்திருக்குன்னா, இப்போ இவர் மூளையோட எண்ணிக்கை ரெண்டாயிரம். அதுவே அந்தப் புத்தகம் ஆயிரம் லட்சம்னு பரவப் பரவ அந்த மூளைகளின் எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டேதான் இருக்கும் என்றவன் எழுத்தாளனுக்கு லட்சம் மூளைகள் லட்சம் உடல்கள் என்று முடித்தன.

                             அனஸ்தீசிய மயக்கத்தில் இருக்கும் எழுத்தாளர் கதிர்காமனின் முகம் ஒரு கணம் “புன்னைகப்பதுபோல” சுவாமிநாதனுக்குத் தோன்றியது.

Monday 16 February 2015

பொக்கிசம் என்றவுடன் உங்களுக்கு தோன்றுவது என்னவாக இருக்கும்???என்னை பொறுத்தவரையில் பொக்கிசம் என்றால் அது ஆனந்த விகடன் என்பேன் அதுவும் இருபது ரூபாயில் கிடைக்கும் பொக்கிசம்.

இளைகர்களை  குறிவைத்து பல வார/மாத  இதழ்கள் வருகிறது "இளைகர்கள் என்றாலே  கொண்டாட்டம்"என பொழது போக்கை மட்டுமே குறிவைத்து வந்த/வருகின்ற புத்தகங்களில் அவர்களுக்கு  கதை, கற்பனை, கவிதை, சமூக சிந்தனையும் அவசியம் என்பதை உணர்த்து தன்னை( ஆனந்த விகடன் ) சிறந்த முறையில் வளர்த்து கொண்டது (நன்றி - S.S பாலசுப்ரமணியன் ). ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சுவை, அவற்றை உங்களுடன் பகிர்த்து கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசையின் வெளிப்பாடே இந்த முதல் முயற்சி.